Thursday 20 October 2011

கன்னப்பூ அருகே,
நீ
கை தாங்கி இருக்கையிலே,,,,,,,?
என்
எண்ணப் பூ எல்லாம்,,,,
இடிமழையால்,சேறான,
நிலம் போலத் தவிக்குதடீ !

ஆற்றங்கரையருகே,,,குளத்து மேட்டருகே,,,
சாய்ந்தாடும்,நாணலதைப் பார்த்திருக்கேன்,,,,,,!
ஆளோடும் வீதியிலே,,,! குவலயத்துக் கூட்டத்திலே,,,,,,,,,,
நாணலாய் !  நீ !
நாணத்துடன்,நின்று,,,நடக்கையிலே,,,,,,,,,,,,,,,,,,,
நாய் பாடு ?,பேய் பாடு?,,, என் பாடு,,?

உன்
எள்ளுப்பூ நாசியில,,,,,மின்னுவது,,,?
பொன் மூக்குத்தி மட்டுமல்ல,,,?
உன்
மின்னல் வெட்டும்,கோபமும்தான்,,!
கோவைப் பழயிதழ்க்காரி,
கோவைக்காய் வித்துப் பல்லழகி,,,,,,,,,
உனைப்பாட,,,,,,,,,,,,,,
நான் தினமும், தவிக்கிறேனடீ  !!
கோலவிழித் தாமரையே !
என்
கொஞ்சும் விழிக் கோமளமே !
உன்,
அணில்பல்,
முத்தைப் போல் புன்னகைக்க,,,,,,,
நீ ! எந்தக் கடலில்,
நீர்,,,,,,,,,,,,,, விளையாடினாய் ?


என் கண்மணீ !
கால,காலங்களுக்கு முன்னால்,,,,,,,
ஆலகாலமாகிப்போன,,,,,
என் கனவுகளுடன்,,,,,,,,,,,,,,,,நான் !
என்னை,
உனக்கு,ஞாபகமிருக்கிறதா?,,,,,,,,,கண்மணீ !

நீரோடுகிற,,வாய்கால் வரப்புகளும்,
வயல் வெளிகளும்,,தென்னை மரச்சோலைகளும்,,,,,,,,,,,
நெஞ்சணைத்து,எடுத்து வரும் புத்தகங்களுக்காக,,,,,
நான்,,,,
தவங்கிடந்த்தும்,,,,,,,,,,
விழி மூடிச் சிரிக்கிற,,,,
உன் புன்னகையில்,,,,
என்னை,,,,,,,
நானே ,,,,தொலைத்துப் போனதுவும்,,,,,
ஞாபகமிருக்கிறதா?................கண்மணீ !

விழாக்களின்,,,மேடைகள்,,எல்லாம்,,
எனக்காக,,
தவங்கிடக்கையில்,,,,,,,,,,,
உன், வருகைக்காக,,,
தவங்கிடந்த,,,,,,,,,,,
இந்த, பைத்தியக்காரனை......
ஞாபகமிருக்கிறதா?..................கண்மணீ !

என்,
நண்பர்களில்லத்து,
முன்வாசலும்,பின்வாசலும்,,,,,,
என்னால்,,,,,,,,
பாதுகாக்கப்பட்ட்து ?
_இரண்டிற்கும்,நடுவே,உன் வாசல்,,,,,,,,
என்பதனால்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,_
இப்போதாவது,,,,
ஞாபகமிருக்கிறதா?...................என் கண்மணீ !